சமீபத்தில் வாசித்த நல்ல கவிதை
மீட்பு
நான் நானாகவே
இருப்பதாகவே
பிறரிடம் காட்டிக் கொண்டிருக்கிறது
என் முகம்
ஒட்டிக் கொண்டிருக்கும்
பாவனைகளிலிருந்து
தோற்றமளித்துக்கொண்டிருக்கும் நான்
என்னையே மீட்டெடுத்து விட்டதான
தருணங்களில்...
வெறுப்புக்களை
சுருக்கிக் கொண்டிருக்கிறதென் இமைகள்
எதையோ தேடும் பாவனையில்
தாழ்ந்த இமைகளிடம்
அகப்பட்டுவிடும் ஒரு புத்தகம்
வடக்கு வாசல் இதழ்களுக்கு சந்தா கட்ட
வடக்கு வாசல் இதழை இனி கீழ்க்கண்ட வலைத்தளத்திலும் சந்தா கட்டி இணையத்தில் வாசிக்கலாம்.
http://www.magzter.com/search_magazine.php?search_magazine=vadakku+vaasal&x=3&y=12
உங்களின் தொடர்ந்த ஆதரவினை வேண்டுகிறோம்.
அன்புடன்
யதார்த்தா கி.பென்னேஸ்வரன்
கணையாழி நேர்காணல்
பெரியவர் ஜி.குருராதாகிருஷ்ணன் என் மீது எப்போதும் மிகுந்த அன்பும் அக்கறையும் காட்டுபவர். வடக்கு வாசல் துவங்கிய நாளில் இருந்து தொடர்ச்சியாக தன் கருத்துக்களை எவ்விதத் தயக்கமும் இன்றி முன்வைப்பவர். என்னுடைய எழுத்துக்களில் நல்லவை என்று தான் கருதும் விஷயங்களை தகப்பனைப் போலப் பெருமை கொண்டு வாழ்த்துகின்றவர். தவறுகள் செய்யும்போது அக்கறை காட்டும் ஆசானாக மாறித் தன்னுடைய கருத்துக்களை எவ்விதத் தயக்கமும் இன்றி நேரடியாக சுட்டிக் காட்டுகின்றவர். இதுவரை நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தது இல்லை. தொலைபேசியில் மட்டுமே எங்களுக்கு இடையில் நீண்ட சம்பாஷனைகள் நடக்கும்.
சென்றவாரம் நான் ரிஷிகேஷ் கோவிலூர் வேதாந்த மடத்தில் தங்கியிருந்து கங்கைக் கரையில் அலைந்து கொண்டிருந்த போது பெரியவர் என்னை தொலைபேசியில் அழைத்தார். “உ003லே உங்களை அண்ணாமலை கணையாழிக்காக எடுத்த பேட்டியை என்னுடைய வலைப்பூவில் ஏற்றியிருக்கிறேன். பாருங்கள்” என்றார்.
சமீபத்தில் வாசித்த சில நல்ல கவிதைகள்
சமீபத்தில் படிக்க நேர்ந்த இந்த மூன்று கவிதைகள் என்னை மிகவும் வசீகரித்தன. பாடுபொருளை மிக எளிமையான அணுகுமுறையுடன் முன்னெடுக்கும் கவிதைகள் இவை. மிகுந்த சொற்சிக்கனத்துடன் வாசகனுடன் நேரடியாக உரையாடல் நிகழ்த்துவது போன்ற அனுபவத்தை வழங்குகின்றன இக்கவிதைகள்.
இவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்கிற விருப்பத்தில் இங்கே வெளியிடுகிறேன்.
சக்தியூர் கோவிந்தன் ஆசிரியராக இருக்கும் “தூறல்” இலக்கியக் காலாண்டிதழில் (இதழ்-10 ஜனவரி 2012) இந்தக் கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன.
மீண்டும் சனிமூலை
ஏறத்தாழ ஒரு ஆண்டு காலம் உறங்கி விட்டு என்னுடைய வலைப்பூவை மீண்டும் திறந்திருக்கிறேன். கடந்த நான்கு நாட்களாக சில பதிவுகளை இட்டு வருகிறேன். என்னுடைய நண்பர் விட்டலன் தேவராஜன் அந்த வலைப்பூவை மிக அழகாக மாற்றி விட்டார். உருவம் அழகாக மாறிவிட்டது. உள்ளடக்கத்திலும் கவனம் செலுத்தவேண்டும்.
நூல் மதிப்புரைகள், டெல்லி வம்புகள் போன்றவற்றை அங்கும், கலை விமர்சனம், நிகழ்வுகள், அரசியல் கட்டுரைகள் போன்றவற்றை இங்குமாகப் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.
இனி ஏறத்தாழ தினமும் என் வலைப்பூவிலும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை இந்தத் தளத்திலும் எதையாவது எழுதலாம் என்று இருக்கிறேன்.
என்னுடைய நண்பர்களும் பகைவர்களும் மனதார என்னை ஆசீர்வதிக்க வேண்டும்.


